News April 22, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,845க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News January 2, 2026
2026-ன் முதல் சூப்பர்மூன் எப்போது தெரியுமா?

இந்தாண்டின் முதல் சூப்பர்மூன் இன்று தெரியும். அதேபோல், ஜனவரி 3-ம் தேதி அதைவிட பெரிய நிலவான ‘Wolf Supermoon’ தோன்றும். இது, வழக்கத்தை விட 15% பெரிதாகவும், 30% பிரகாசமாகவும் இருக்கும். இந்த அற்புதமான காட்சியை நேரடியாக காணலாம். கடந்தாண்டு அக்., நவ., டிச., ஆகிய மாதங்களில் சூப்பர்மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இன்று சூப்பர்மூன் பார்க்க தவறினால், நீங்கள் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
News January 2, 2026
ஜன.5-ல் கூட்டணி முடிவை எடுக்கும் பிரேமலதா

ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுவரை, தேமுதிக கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் நிலையில், DMK அல்லது ADMK கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தவெகவுடன் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News January 2, 2026
நேதாஜி பொன்மொழிகள்!

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்


