News April 25, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹1,160 குறைந்த நிலையில், இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,730க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50க்கு விற்பனையாகிறது.
Similar News
News September 24, 2025
இந்திய வரும் மெஸ்ஸி… ஆஸி., அணியுடன் மோதுகிறார்

நவம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவுடன் நட்புறவு போட்டியில் மோதுகிறது. மெஸ்ஸியின் வருகை ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிகாரிகள் அடுத்த வாரம் கொச்சி மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் விளையாடவுள்ள மெஸ்ஸியை வரவேற்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர். Vamos Messi..
News September 24, 2025
குறட்டை விடுறீங்களா? இதய பிரச்னையா கூட இருக்கலாம்

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News September 24, 2025
விஜய்க்காக விட்டுக் கொடுத்தாரா அன்புமணி?

செப்.27-ல் கரூரில் பிரசாரம் மேற்கொள்வதற்கு விஜய் அனுமதி கேட்டிருந்தார். அதே நாளில், அன்புமணியும் தனது நடைபயணத்திற்கு அனுமதி கோரியதால், விஜய்க்கு சிக்கல் எழுந்தது. இதனையறிந்த அன்புமணி, தனது பயணத்தை செப்.28-க்கு மாற்றி விஜய்க்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக தரப்பில் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்கப்படாத நிலையில், அன்புமணியின் இந்த அணுகுமுறை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.