News June 28, 2024
பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழை காரணமாக பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ ₹1,500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ₹300க்கும், ₹1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ₹400க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ₹200க்கு விற்கப்பட்ட அரளி ₹70க்கும், ₹90க்கு விற்ற வாடாமல்லி ₹50க்கும், ₹125க்கு விற்பனையான சிகப்பு கேந்தி ₹85க்கும் விற்கப்படுகிறது.
Similar News
News October 24, 2025
Dejavu ஏற்படுவது எப்படி தெரியுமா?

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.
News October 24, 2025
சேலையில் ருக்மிணி வசந்த்

ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காந்தாரா படத்தில் இளவரசி கனகவதியாக கலக்கிய ருக்மிணி, அதே காஸ்டியூமான சேலையை அணிந்து தொடர்ச்சியாக போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
News October 24, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

10, +2 பொதுத்தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தற்போதே தயார் செய்துவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஸிடம் பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா இன்று ஒப்படைத்துள்ளார். நவ.4-ம் தேதி தேர்வு தேதி அடங்கிய விவரங்களை அமைச்சர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன மாணவர்களே, ரெடியா..!


