News May 15, 2024
பீன்ஸ் விலை ₹200ஐ தொட்டது

கோடை வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர் இருப்பு குறைவு ஆகிய காரணங்களால் காய்கறிகளின் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களாக பீன்ஸ் விலை சென்னை கோயம்பேடு மொத்த சந்தையிலேயே ₹200ஐ தொட்டுள்ளது. சில்லரை விற்பனையில் ₹220 முதல் ₹240 வரை பீன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News April 4, 2026
கிருஷ்ணகிரி: எம்எல்ஏ உட்பட 2,500 பேர் மீது வழக்கு!

தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சுமார் 2,500 பேர் முன் அனுமதியின்றி ஊர்வலமாக வந்து இடையூறு ஏற்படுத்தியதாக பறக்கும் படை அதிகாரி பிரசாந்த் குமார் அளித்த புகாரின் பேரில், ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 2,500 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு.
News April 4, 2026
சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், திருமண யோகம் கூடி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜயோகம்தான். நீங்க என்ன ராசி?
News April 4, 2026
விஜய் செய்வது சரியான அரசியல் அல்ல: கனிமொழி

எதையெல்லாம் செய்ய முடியாதோ அவற்றை வாக்குறுதியாக அளித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வேலை என <<19546892>>விஜய்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கனிமொழி, உண்மை எதுவென்றே தெரியாமல் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுவது சரியான அரசியல் கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த மகளிர் உரிமைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.


