News March 13, 2025
ஒரு லிட்டர் பால் விலை ₹80

ஹட்சன் நிறுவனம் அதன் ஆரோக்யா பாலின் விலையை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76இல் இருந்து ₹80ஆக உயர்த்தப்படுவதாகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
Similar News
News March 13, 2025
பிரபல நடிகை காயம்… நெற்றியில் 13 தையல்கள்!

பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்தார். நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு 13 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமாகி பான் இந்தியாவுக்கும் பிரபலமான இவர், தமிழில் ‘தலைவி’ படத்தில் கூட அண்மையில் நடித்திருந்தார். இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News March 13, 2025
முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை – ஏன் தெரியுமா?

தமிழக பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை. தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தமிழக அரசு வாங்கும் கடன் மாநில வளர்ச்சிக்காக எப்படி செலவிடப்படுகிறது என்பதை மக்கள் அறியவே பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடும்.
News March 13, 2025
அடுத்த 18 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை

IT மற்றும் ITES ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் மீதமுள்ள 18 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை வருகிறது. 15-16 ஆம் தேதிகள் வார இறுதி நாட்களும் என்பதால், தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை. அதேபோல், மார்ச் 22, 23 மற்றும் 29 ஆம் தேதி வார இறுதி, 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை + உகாதி மற்றும் 31 ஆம் தேதி ரம்ஜான் என மொத்தம் 7 நாட்கள் லீவ் வருகிறது. எனவே, இப்போதே ஜாலியான பயணம் மேற்கொள்ள திட்டமிடுங்கள்.