News December 18, 2024
விலை கம்மி! செயல் அதிகம்!!

சாத்துக்குடி ஜூஸ் அனைத்து சீசன்களிலும் அருந்தும் ஒரு அற்புதமான பானம். நாள்தோறும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இதனால், நாள் முழுவதும் கலோரிகளை உங்கள் உடல் மிகத் திறமையாக எரிக்க உதவும். இந்த சிட்ரஸ் பழம் உடல் எடை குறைப்புக்கு உதவும் எனக் கூறப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செரிமானத்தை மேம்படுத்தும் இதன் திறன் ஆகும்.
Similar News
News September 6, 2025
இந்தியா செய்த காரியத்தால் ஏமாற்றமடைந்தேன்: டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இவ்வளவு அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கியதால் தான் ஏமாற்றமடைந்ததாக டிரம்ப் கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு PM மோடி உடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட அவர், தற்போது 50% வரி விதிக்கப்பட்டதாகவும் கூறினார். உக்ரைன் போருக்கான நிதியை கச்சா எண்ணெய் மூலம் இந்தியா, ரஷ்யாவுக்கு வழங்குவதாக டிரம்ப் உள்பட USA அமைச்சர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனை இந்தியா மறுத்துள்ளது.
News September 6, 2025
ரஷ்யாவிடமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: நிர்மலா

தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய் மட்டுமல்ல, எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும், அதனை வாங்கும் முடிவை இந்தியாவே எடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விலை, கொண்டுவரப்படும் செலவு உள்ளிட்டவற்றில் எங்கு வாங்கினால் பலன் கிடைக்குமோ, அங்குதான் இந்தியா பொருட்களை வாங்கும் என்றார்.
News September 6, 2025
Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!