News March 28, 2025
அன்று விலை போகவில்லை… இன்று PURPLE CAP HOLDER!

ஐபிஎல் தொடரில் எப்பவுமே ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். மெகா ஏலத்தில் விலை போகாத வீரர்தான், இன்று பர்பிள் கேப்-க்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். லக்னோ வீரர் மோசின் கான் காயமடைந்ததால், அவருக்கு மாற்றாக ஷர்துல் தாகூர் அணியில் இணைந்தார். 2 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியும் அவர் சாதனை படைத்துள்ளார்.
Similar News
News March 31, 2025
‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட்

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியுள்ளது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், ஃபகத் பாசில், அசோக் செல்வன், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கின்றனர். கோல்டன் ரேயோம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
News March 31, 2025
தேஜாவு: அன்று நடந்தது இன்றும்..!

CSK vs RR மோதிய போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 2023 மற்றும் நேற்று நடந்த போட்டிகள் ஒரே மாதிரியான முடிவை எட்டியுள்ளன. 2023ல் CSK வெல்ல ஒரு ஓவருக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது, நேற்று 20 ரன்கள் தேவைப்பட்டது. 2 போட்டிகளிலும் தோனி, ஜடேஜா களத்தில் இருக்க, கடைசி ஓவரை சந்தீப் ஷர்மா வீசியுள்ளார். இந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
News March 31, 2025
நேதாஜி பொன்மொழிகள்

*சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். *ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும். *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம். *போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும். * வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.