News March 16, 2024
புதுக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் இலுப்பூர் நகரம் சார்பில் காங்கிரஸ் திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி பாரதிய ஜனதா சார்பாக நேற்று இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.இதில் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் இலுப்பூர் நகர பொறுப்பாளர் சசிகுமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சபரிநாதன், கிளை தலைவர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Similar News
News August 8, 2025
புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, கணேஷ் நகர் கார்த்திக் மஹால், அறந்தாங்கி வசந்தம் மஹால், கே.புதுப்பட்டி சமுதாயக்கூடம், கோட்டைப்பட்டினம் இ-சேவை மையம், மீமிசல், இலுப்பூரில் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
புதுக்கோட்டை: முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்கோயில்

திருமயம் அடுத்த கண்ணனூரில் பாலசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டில் முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலில் முருகன் 4 கரங்களுடன், யானை வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பாகும். இங்கு கருவறைக்கு நேராக நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக 9 துவாரங்களுடன் கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியே முருகனை தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க
News August 8, 2025
முத்துமாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜைக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி பூஜை நாளை (ஆக.,8) மாலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.