News April 13, 2025
அண்ணாமலை கடந்துவந்த அரசியல் பயணம்..!

2019 மே 28-ல் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அதற்கு அடுத்த ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து, 2021 ஜூலை 8-ல் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உருவெடுத்தார். சுமார் 4 ஆண்டுகளாக வகித்த அந்த பதவியில் இருந்து தற்போது விடைபெற்ற அண்ணாமலைக்கு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியுள்ளது.
Similar News
News April 13, 2025
‘குடும்பஸ்தன்’ படத்தை மிஸ் செய்த 2 நடிகர்கள்

மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தின் கதை முதலில் அசோக் செல்வனிடம் கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் இல்லாததால், அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால், அதற்கும் முன்னதாகவே இந்த கதை தன்னிடம் சொல்லப்பட்டதாக சிபிராஜ் தெரிவித்துள்ளார். சில காரணங்களால் படம் மிஸ் ஆனதாகவும், ஆனால் மணிகண்டன் பண்ண அளவிற்கு அந்த கேரக்டரை வேறு யாராலும் பண்ண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News April 13, 2025
ரேஷன் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு இந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை. நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை தினம் என்பதால், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. இதுபோல் வருகிற 18ம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படவுள்ளது. இதனால் அன்றைய தினமும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. எனவே ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படவும். ஏமாந்து விட வேண்டாம்.
News April 13, 2025
உடனே வெளியேறுங்க.. டிரம்ப் நிர்வாகம் புது உத்தரவு

USA-ல் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர் உடனே வெளியேற வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. X பக்கத்தில் USA உள்துறை வெளியிட்டுள்ள பதிவில், 30 நாள்களுக்கு மேல் USA-ல் தங்கியிருப்போர் அரசிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த உத்தரவு, H-1 B விசா, மாணவர் விசா பெற்று USA-ல் தங்கியிருப்போருக்கு பொருந்தாது.