News April 9, 2025

குமரியில் பிறந்த அரசியல் இமயம்!

image

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் 1933, மார்ச் 19ல், சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன், தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் குமரி அனந்தன். இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். அரசியலில் ஆர்வம் அதிகரிக்க, காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். பனைமரத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரது மறைவு அரசியல் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #RIP

Similar News

News January 20, 2026

விபத்தில் சிக்கிய அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு கார்

image

மும்பை ஜூஹுவில் ஒரு மெர்சிடிஸ் கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில், அந்த ஆட்டோ அக்‌ஷய் குமார் பாதுகாப்பு சென்ற கார் மீது மோதியது. அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னா வேறொரு காரில் இருந்ததால், அவர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2026

லைட் போட்டுக் கொண்டு தூங்கலாமா?

image

இரவில் லைட் போட்டுக் கொண்டு தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 89,000 பேரின் இதய செயல்பாடு தொடர்ந்து ஆராயப்பட்டதில், வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு, இருளில் உறங்குபவர்களைவிட ஹார்ட் அட்டாக் ஆபத்து 47%, இதய செயலிழப்பு ஆபத்து 56% அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் செயல்பாடு சீராக இருக்க, இரவில் வெளிச்சமில்லாத சூழலில் உறங்குவது நல்லது.

News January 20, 2026

பிக்பாஸ் திவ்யாவை பாதித்த அந்த விஷயம்

image

பிக்பாஸ் வெற்றியையடுத்து, தனது திருமணம் பற்றி திவ்யா கணேசன் பகிர்ந்த தகவல் SM-ல் வைரலாகிறது. தன்னுடைய Ex-காதலன் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்றும், 2018-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், திடீரென திருமணம் நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதனால் பிறரை நம்புவதற்கே பயமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!