News June 28, 2024
பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவலர்கள்

செங்கல்பட்டு அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்தனர். விசாரணைக்காக அழைத்தபோது வர மறுத்த அவர் காவலர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவரின் காலில் குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
News March 2, 2026
3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.
News March 2, 2026
பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் நாளை (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT.


