News September 15, 2025

முடிவுக்கு வந்த பாமக பிரச்னை: K.பாலு

image

பாமகவின் தலைமை, சின்னம் <<17715168>>அன்புமணியின் வசம்<<>> வந்துள்ளதன் மூலம் குழப்பம் தீர்ந்துவிட்டதாக K.பாலு தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில், பாமக வேட்பாளர்களை அன்புமணிதான் அறிவிப்பார் எனவும், A, B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், ராமதாஸின் வழியை பின்பற்றியே தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News September 15, 2025

பாமக தலைவர் அன்புமணி கிடையாது: ராமதாஸ் தரப்பு

image

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக <<17715384>>வழக்கறிஞர் பாலு<<>> சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான்; தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கறிஞர் பாலு தவறாக பரப்புகிறார் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

News September 15, 2025

பி.எட்., படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் 2 அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள் உள்ளதாகவும், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 15, 2025

ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: SC

image

ஒப்பந்த நர்ஸ்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று SC தெரிவித்துள்ளது. ஒப்பந்த நர்ஸ்களின் சம்பளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுவதாக கடுமையாக சாடியுள்ளது. இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கும் நிலையில், சம்பளம் கொடுக்க பணமில்லையா என்றும் SC கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய அரசு, நர்ஸ் சங்கம் பதிலளிக்க SC உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!