News November 18, 2024
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை பலி

சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை எலினா உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ம.பி.யில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்று திரும்பிய அவர், ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உடல்நல பாதிப்பால் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட எலினா உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News March 28, 2026
சவுதி பிரதமருடன் PM மோடி ஆலோசனை

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது மேற்காசிய பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியாவின் கண்டனத்தை மோடி பதிவு செய்தார். மேலும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஏற்றுக் கொண்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
News March 28, 2026
சீர்காழியில் தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
முழு ஆண்டு தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1-ல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி 2 நாள்களுக்கு முன்னதாக, மார்ச் 30-க்குள் (திங்கள்கிழமை) பள்ளி நிர்வாகத்திடம் வினாத்தாள்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. EMIS தளத்தில் வினாத்தாள்களை அலுவலர்கள் டவுன்லோடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களே, பதற்றமின்றி தேர்வை எழுதுங்கள். ALL THE BEST!!!


