News April 28, 2024
தேர்தல் ஆணையத்தை விமர்சித்தவர் கைது!

தேர்தல் ஆணையத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (51) தனது பேஸ்புக் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜி, நேற்றே சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
Similar News
News January 25, 2026
பிரபல பாடகர் மாரடைப்பால் காலமானார்

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அபிஜித் மஜும்தார்(54) மாரடைப்பால் இன்று காலமானார். ஒடியா திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த அபிஜித், 57 படங்களில் பணியாற்றி கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தனது இசையால் ஒடிசா மக்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் கவனம் ஈர்த்த அபிஜித்தின் திடீர் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News January 25, 2026
திமுக கூட்டணியில் ராமதாஸ்? திருமா ரியாக்ஷன்

பாமக (அன்புமணி), அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி திமுக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது) என்றும் அவர் கூறினார். முன்னதாக, ராமதாஸ் பெறாத பிள்ளை திருமா என பாமக MLA அருள் கூறியிருந்தார்.
News January 25, 2026
தவெக கூட்டணி: விஜய் முன்னிலையில் KAS கூறினார்

விஜய் உடன் இணைந்த பிறகு தான் செல்லும் இடமெல்லாம் செல்பி எடுக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி; அது தவெகவால் மட்டுமே முடியும் என்றார். மேலும், கூட்டணி இல்லை என கவலை வேண்டாம்; தமிழகம் முழுவதும் நமக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் வெற்றி உறுதி என்றார். உங்கள் கருத்து என்ன?


