News April 4, 2024
உணவு வரவில்லை என புகார் கூறியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என கஸ்டமர் கேர் எண்ணிற்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் ரூ.35 ஆயிரம் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவே ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளார். இதனை அவரது மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளார்.
Similar News
News January 22, 2026
கவர்னர் மாளிகை லோக் பவன் அல்ல; லோக்கல் பவன்: DMK MLA

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவமதிக்கப்பட்டதாக <<18904228>> கவர்னர் மாளிகை<<>> அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின்போது, கவர்னர் குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக MLA பரந்தாமன் முன்வைத்தார். அப்போது பேசிய அவர் கவர்னர் மாளிகையை ‘அது லோக் பவன் அல்ல, லோக்கல் பவன்’ என விமர்சித்தார்.
News January 22, 2026
SBI வங்கி அக்கவுண்ட் இருந்தால் ₹2 லட்சமா?

எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ₹2 லட்சம் பணம் தரப்படுவதாக ஒரு தகவல் ஷேர் செய்யப்படுகிறது. உண்மையில் இது சில கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் லோன் ஆஃபராம். இதற்கு SBI வாடிக்கையாளர் என்பதை தவிர, Salary account-ம், மாத வருமானம் குறைந்தது ₹15,000-ம் இருக்க வேண்டும். CIBIL ஸ்கோர் 650 அல்லது 700க்கு மேல் இருந்தால், இந்த லோனுக்கு அப்ளை செய்யலாம். மேலதிக தகவலுக்கு வங்கியை அணுகவும்.
News January 22, 2026
தவெகவுக்கு சின்னம் கிடைத்தும் விஜய்க்கு சிக்கல்

<<18924405>>தவெகவுக்கு விசில்<<>> சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அது <<18925499>>உலக அளவில் டிரெண்டாகியுள்ளது<<>>. விசில், பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டாலும் தவெக போட்டியிடாத தொகுதிகளில் அது வேறு யாருக்கேனும் ஒதுக்கப்படும் என ECI அறிவித்துள்ளது. இதனால், தனித்து போட்டியிட்டால் 234 தொகுதியிலும் விசில் சின்னத்தை பெற முடியும். ஒருவேளை கூட்டணி கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் அங்கு விசில், சுயேட்சைக்கு சென்றுவிடும்.


