News May 29, 2024
சிகிச்சைக்கு வந்தவர் அடித்துக்கொலை

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. KMCH மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளைத் திருட முயன்றதாக ராஜா என்பவரை ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை திருட வந்ததாகக் கருதி அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
BREAKING: நாடு முழுவதும் முடங்கியது.. கடும் அவதி

இந்தியாவில் கூகுள் மீட் சேவை திடீரென முடங்கியதால் பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கும் கூகுள் மீட் முடக்கத்தால், அலுவலக கூட்டங்கள், ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் அதிருப்தியை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அண்மைக் காலமாக சோஷியல் மீடியா தளங்கள் திடீரென முடங்குவது வாடிக்கையாகியுள்ளது.
News November 26, 2025
மக்கள் பழசை விரைவாக மறந்துவிட்டனர்: கம்பீர்

சொந்த மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் தொடர் தோல்விக்கு, முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த காலத்தை விரைவாக மறந்துவிட்டதாக வருத்தத்துடன் கம்பீர் தெரிவித்துள்ளார். தனது தலைமையில் – சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் உள்ளிட்டவையில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News November 26, 2025
கோவைக்கு NO, புனேவுக்கு YES.. மீண்டும் மெட்ரோ சர்ச்சை!

புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ₹9,858 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி, தமிழக அரசு, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த அனுமதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


