News April 20, 2025
ரயிலில் முத்தம் கேட்ட நபர்.. நடிகை மாளவிகா ஓபன் டாக்

மும்பையில் ரயிலில் சென்றபோது தன்னிடம் ஒரு நபர் முத்தம் கேட்டதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் பேட்டை, தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கல்லூரிக் காலத்தில் மும்பை மின்சார ரயிலில் சென்றபோது ஒருவர் முத்தம் கேட்டதாகவும், இதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 18, 2025
ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

மறைந்த நகைச்சுவை நடிகர் <<17754481>>ரோபோ சங்கர்<<>> மறைவுக்கு முதல் நபராக நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் ‘தம்பி ரோபோ சங்கர், போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?’ என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
News September 18, 2025
அறைய சொன்ன KS அழகிரிக்கு கங்கனா பதிலடி

ஏர்போர்ட்டில் CRPF வீரர், கங்கனா ரனாவத்தை அறைந்தது குறித்து பேசிய KS அழகிரி, கங்கனா இந்த பக்கம் (தென்னிந்தியா) வந்தால் அவரை அறைந்துவிடுங்கள் என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய கங்கனா, இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் நம்மை தடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெண்களுக்கெதிரான அவதூறு கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்ககூடாது என்றும் கூறினார்.
News September 18, 2025
EPS தான் CM வேட்பாளர்: அண்ணாமலை உறுதி

தமிழகத்தில் NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என்று அண்ணாமலை உறுதிப்படுத்தியுள்ளார். அமித்ஷா கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், EPS-ஐ CM ஆக்குவதற்கு ஒற்றை நோக்கத்துடன் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு ரீதியாக விரைவில் TTV, OPS ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் நலனுக்காக சிலவற்றை பேசவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.