News October 7, 2025

நாட்டு மக்கள் CJI-க்கு ஆதரவாக நிற்க வேண்டும்: சோனியா

image

CJI BR கவாய் மீதான தாக்குதல், அரசியல் அமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டிக்க வார்த்தைகளே இல்லை எனவும், CJI-க்கு ஆதரவாக நாட்டு மக்கள் துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கேரள CM பினராயி விஜயன், தமிழ்நாடு CM ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 7, 2025

CJI மீது செருப்பு வீச முயன்றவர் விடுவிப்பு

image

CJI பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில், அவர்களின் சம்மதத்தை பெற்று ராகேஷை விடுவித்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக வழக்கறிஞர் ராகேஷிடம் டெல்லி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.

News October 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News October 7, 2025

TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

image

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!