News February 28, 2025
தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள்: திருமா

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டுமென ஆளுநர் கூறுவது RSS, BJPயின் ஆதிக்க மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரே தேசம், ஒரே மொழியை செயல்படுத்துவதற்காக ஆளுநர் இப்படி பேசி வருவதாகவும், அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்றார்.
Similar News
News March 1, 2025
பிரதமர் உறுதி அளிப்பாரா? CM ஸ்டாலின் கேள்வி

தொகுதி மறுசீரமைப்பால் TNன் தொகுதிகள் குறையாது என PM மோடி உறுதி அளிப்பாரா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மிரட்டுனா அடங்குறவங்க இல்ல நாங்க, அடக்க நினைப்பவர்களை அடங்க வைப்பவர்கள் என்றார். TNன் உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
News March 1, 2025
மார்ச் 26க்குள் KYC அப்டேட்.. PNB வேண்டுகோள்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) டிசம்பர் 31ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யும்படி வாடிக்கையாளர்களை ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. எனினும் சிலர் இன்னமும் அதை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்கள், உடனே வங்கிக் கிளைகளுக்கு சென்று மார்ச் 26க்குள் செய்யும்படி PNB வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News March 1, 2025
கண்ணீர் விட்டு அழுத வீரப்பன் மகள்

வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானபோது, வீரப்பன் மகள் வித்யாராணியும் வந்திருந்தார். அங்கிருந்த போலீசாரிடம் தாமும் போலீஸ் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என அவர் கூறினார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசாருடன் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழவும் செய்தார். எனினும் அவரை போலீஸ் அனுமதிக்கவில்லை.