News August 7, 2024
தங்கம் தென்னரசு வழக்கு கடந்து வந்த பாதை…

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2012இல் ஜெயலலிதா ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. 11 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், கடந்த 2022இல் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தங்கம் தென்னரசுவை விடுவித்து உத்தரவிட்டது.
Similar News
News March 9, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் கொடுத்த HAPPY NEWS

மகளிர் உரிமைத்தொகை ₹1000-ல் இருந்து ₹2000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், திமுகவின் மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்த நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே ஓட்டுப்போட மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இதனால் தான் அதிமுக தங்கள் திட்டத்தை டாப் அப் செய்து தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 9, 2026
ChatGPT-யிடம் கேட்டு எக்ஸாம் எழுதிய மாணவர்கள்!

டீச்சர்கள் எக்ஸாமில் பிட் அடிக்க உதவியது தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவின் 10 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் ChatGPT-யை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ளனர். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த 81 டீச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே எக்ஸாம் செண்டரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2026
தமிழ்நாட்டின் எதிரி யார் என்று தெரியும்: CM ஸ்டாலின்

வரும் தேர்தல் எப்படி தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தலாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு CM ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திருச்சி மாநாட்டில் பேசிய அவர், தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டின் ஒரே எதிரி யார் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் திமுகவுக்கு மட்டும்தான் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


