News September 6, 2025

அலிஷாவை கட்சி கவனிக்கிறது: அண்ணாமலை

image

TN BJP புதிய நிர்வாகிகள் பட்டியலில், தனது பெயர் இல்லாததால், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அலிஷா கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் பொறுப்பு கொடுப்பார்கள், கட்சி அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Similar News

News March 26, 2026

தூத்துக்குடி: குளத்தில் சடலமாக மிதந்த சிறுவன்

image

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் மதன் (17). இவர் நேற்று முந்தினம் வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடிய போது சில்வர்புரத்தில் உள்ள மாடங்குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2026

புதுவை: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (14). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் கேம் விளையாடியதால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷிவானி வீட்டின் மாடி அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் 1 அவுன்ஸ்(28g) $50 குறைந்து $4,529 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளியும் நேற்று $74 விற்பனையான நிலையில், தற்போது $71 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில், தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ₹2,800 அதிகரித்து ₹1,08,800-க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!