News September 4, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்!

மந்திரம்:
‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,
ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’
*காலை பிரம்ம முகூர்த்த வேளையில் விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். SHARE IT.
Similar News
News September 5, 2025
PHOTO GALLERY: அப்பாவாகும் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி அமரன் விரைவில் அப்பாவாக உள்ளார். சமீபத்தில் நடந்த பிரேம்ஜி மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தற்போது 46 வயதாகும் பிரேம்ஜி, தன்னுடைய 45-வது வயதில், இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுவரை பேச்சிலராக சுற்றி வந்த அவர், திருமணத்திற்கு பின் தீவிர குடும்பஸ்தனாக மாறிவிட்டார்.
News September 5, 2025
அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி: கே.பாலகிருஷ்ணன்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி என்றும் அதை ஒட்ட வைப்பது மிகக் கடினம் எனவும் கூறினார். அதிமுகவில் OPS, TTV, சசிகலாவை இணைத்தால் தனது பொதுச் செயலாளர் பதவிக்கு பிரச்னை வரும் என கருதி, EPS அவர்களை ஏற்க மாட்டார் என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
News September 5, 2025
இந்தியாவை இழந்துவிட்டோம்: டிரம்ப்

இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங், புடின், மோடி எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, இந்தியா, ரஷ்யாவிற்கு வளமான வருங்காலம் அமையட்டும் என்றும் அவர் தனது Truth சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவும், ரஷ்யாவும் சீனாவின் பிடியில் சென்றுவிட்டதாக அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.