News March 22, 2024

கோலாகலமாகத் தொடங்கியது ஐபிஎல் தொடக்க விழா

image

ஐபிஎல் 17ஆவது சீசன் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிவாஜி படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலை பாடி அசத்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை முடிந்த பின் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி தொடங்கும்.

Similar News

News January 30, 2026

உலகின் நீளமான நடைபாதை.. மொத்தம் 22,387 கிமீ

image

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் ரஷ்யாவின் மகதான் வரை நீளும் சாலையே, ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய உலகின் மிக நீளமான சாலையாக உள்ளது. சுமார் 22,387 கிமீ நீளம் கொண்ட இப்பாதை 17 நாடுகளை கடந்து செல்கிறது. போர்கள், விசா சிக்கல்கள் மற்றும் கடுமையான குளிர் போன்ற காரணங்களால் இந்த சாலையில் இதுவரை யாரும் பயணம் மேற்கொண்டதில்லை.

News January 30, 2026

தமிழகம், புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

image

வள்ளலார் நினைவு நாளையொட்டி, நாளை மறுநாள் (பிப்.1) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடுவது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் அன்றைய தினம் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.

News January 30, 2026

வரலாற்றில் 2-வது முறை.. ஞாயிறில் பங்குச் சந்தை

image

பொதுவாக வார இறுதி நாள்களில் விடுமுறை விடப்படும் பங்குச்சந்தைகள், வரும் ஞாயிறு (பிப்.1) அன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்று நடப்பது வரலாற்றில் 2-வது முறையாகும். முன்பு, வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​பட்ஜெட்டை தாக்கல் செய்த பிப்ரவரி 28, 1999-ல் வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குச் சந்தை திறந்திருந்தது.

error: Content is protected !!