News April 10, 2024

கச்சத்தீவு மீட்பே ஒரே வழி

image

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி என ஓபிஎஸ் கூறியுள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.

Similar News

News April 1, 2026

கால் செய்தால் போதும், உதவி தேடிவரும்… எப்படி தெரியுமா?

image

தனியாக போகும் போது பிரச்னையா? திடீர் உடல்நல கோளாறா? ‘112’ என்ற எண்ணுக்கு Call பண்ணால் போதும். Inbuilt-ஆக இருக்கும் கூகுள் Emergency Location Service மூலம், உங்களின் லொக்கேஷன் மீட்புக் குழுவினருக்கு (காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை) அனுப்பப்பட்டு விடுகிறது. உ.பி.,யில் தற்போது செயல்பட்டு வரும் இச்சேவையால், ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தமிழகத்திலும் கொண்டுவரலாம் அல்லவா?

News April 1, 2026

அதிருப்தி பாஜகவினருக்கு வலைவீசுகிறதா திமுக?

image

பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்காததால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை ஸ்மெல் செய்த திமுக, செந்தில்பாலாஜியை வைத்து அதிருப்தியில் இருப்பவர்களை அலேக்காக தூக்கிவர முயற்சித்து வருகிறதாம். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பெரும் பூகம்பம் வெடிக்கலாம் என அக்கட்சியினர் சொல்கின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

விஜய் உயிருக்கு ஆபத்து.. தவெக சார்பில் பரபரப்பு புகார்

image

தவெக கூட்டத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். சென்னையில், நேற்று பாட்டில்களை வீசியது திட்டமிட்ட செயல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, ‘Y’ பரிவு பாதுகாப்பிலிருந்தும் விஜய்யின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

error: Content is protected !!