News March 9, 2025
மணமகள் 7 நாட்கள் துணி இல்லாமல் இருக்கும் ஒரே இடம்

இந்தியாவில் ஒரு கிராமத்தில் திருமணத்திற்குப் பிறகு மணமகள் 7 நாட்கள் ஆடை அணிய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம்! இந்த தனித்துவமான பாரம்பரியம் இமாச்சலப் பிரதேசத்தின் மணிகரன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பினி கிராமத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சடங்கு கிராமவாசிகளின் வலுவான நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில், மணமகனும், மணமகளும் எந்த தொடர்பும் கொள்ளமாட்டார்கள்.
Similar News
News March 10, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகிலேயே தவறான செயல் வேறெதுவும் இல்லை
– மார்ட்டின் லூதர் கிங்.
News March 10, 2025
விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த ரோஹித்

டெஸ்டில் நியூசி., அணியிடம் தோல்வி.. ஆசி.,யிடமும் இதே நிலை.. இதுதவிர ஃபார்ம் இல்லாததால் பிரச்சனை.. ரோஹித்துக்கு CT தான் முடிவு என பலரும் விமர்சிக்க.. இதற்கெல்லாம் தனது கேப்டன்சியுடன் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் 4 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து முடிவு சரியானது என்பதை நிரூபித்தார். கோப்பையை வென்று அவரை விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் நீட்ட வைத்தார்.
News March 10, 2025
ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.