News October 4, 2025
2027 ODI WC-ஐ வெல்வதே ஒரே இலக்கு: ஷுப்மன் கில்

ODI கேப்டனாக நியமித்தது தனக்கு பெரிய கவுரவம் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதே தங்களுடைய ஒரே இலக்கு எனவும், அதற்கு முன்பாக இருக்கும் 20 ODI போட்டிகளில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி, உலகக்கோப்பையை வெல்ல தயாராவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI கேப்டனாக சிறப்பாக அணியை வழிநடத்த முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
சாப்பிட்டதும் தூங்க செல்கிறீர்களா? இதை கவனிங்க

சாப்பிட்டதும் பலரும் தூங்கி விடுகிறார்கள். இது நமது ஹார்மோனல் சமநிலையை பாதிக்கும். உணவு ஜீரணத்தை தாமதமடைய செய்யும். மேலும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னையை உண்டாக்கும். உடல் எடை அதிகரிப்பு, பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டுமென உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
News October 5, 2025
3,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் உலகளவில் 3,000 பேரை வேலைநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சேமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என்றும், HR மற்றும் Finance துறைகளில் இந்த வேலைநீக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ரெனால்ட் விளக்கம் அளித்துள்ளது. 2024-ல் 98,636 பேர் உலகளவில் வேலை செய்தனர்.
News October 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க