News April 9, 2025

LSG ஓனரை அட்டாக் செய்த பண்ட்?

image

KKR-க்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸின் போது, LSG-யின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என ரிஷப் பண்ட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறமாட்டேன் எனவும், தங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன் என பண்ட் பதிலளித்தார். LSG உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடனான பிரச்னையால் தான், ஹேப்பியாக இல்லை என அவர் கூறியதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

இந்தியா – பாக்., மோதலில் டிரம்ப் புது தகவல்

image

இந்தியா – பாக்., மோதலை வரி விதிப்பை சுட்டிக்காட்டி தானே தீர்த்து வைத்ததாக USA அதிபர் டிரம்ப் 60-வது முறையாக கூறியுள்ளார். அதிலும் இம்முறை, 350% வரி விதிக்கப்படும் என எச்சரித்ததும், நாங்கள் (இந்தியா) போருக்கு போவதில்லை என்று PM மோடி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, டிரம்ப்பின் தொடர்ச்சியான மத்தியஸ்தம் குறித்த பேச்சை <<18336352>>காங்.,<<>> கிண்டலடித்திருந்தது.

News November 21, 2025

காதல் பறவைகளுக்கு வாழ்த்து கூறிய மோடி..!

image

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை நவ.23-ல் கரம்பிடிக்கிறார். அவர்களுக்கு <<18342884>>நிச்சயதார்த்தம்<<>> நடந்ததையொட்டி, வாழ்த்து தெரிவித்து PM மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், இரு சாதனை நபர்களின் சங்கமம் என பாராட்டு தெரிவித்த அவர், இந்த ஜோடி தங்களது பயணத்தில் சுற்றியுள்ளவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 21, 2025

அனில் அம்பானியின் ₹1,400 கோடி சொத்துக்கள் முடக்கம்

image

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி & அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீது ED விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அனில் அம்பானிக்கு தொடர்புடைய ₹1,400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை ED முடக்கியுள்ளது. இதுவரை ₹9,000 கோடி அளவிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அனில் ED அலுவலகத்தில் ஆஜராகவில்லை.

error: Content is protected !!