News August 5, 2024
முன்னேற்றம் அடையும் ஒலிம்பிக் போட்டிகள்

ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் விளையாட்டு வீரர்கள் புதிய முறைகளை கையாண்டு உலக சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1988ஆம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கார்ல் லூயிஸ், 9.92 விநாடிகள் எடுத்துக் கொண்டார். ஆனால், இந்தாண்டு கடைசி இடம் பிடித்த செவில், வெறும் 9.91 விநாடிகளில் இலக்கை கடந்தார்.
Similar News
News February 3, 2026
எல்லாத்தையும் டெல்லி கிட்ட கேட்கணுமா? அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என அண்ணாமலை கூறியுள்ளார். பிரவின் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரவீன் மீது TN காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லிக்கு லெட்டர் எழுதியிருப்பதாக சொல்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும், இப்படி தொட்டதுக்கெல்லாம் டெல்லிக்கு செல்வதால்தான் காங்கிரஸை அடிமை கட்சி என கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
முருகர் பாடலுக்காக விஜய் மீது புகார்

முருக பக்திப் பாடலை இழிவுப்படுத்தியதாக <<19028273>>விஜய்<<>> மீது இந்து முன்னணி புகாரளித்துள்ளது. தவெக 3-ம் ஆண்டு விழாவில் ’மருதமலை மாமணியே’ பாடலை வேல்முருகன் பாடியிருந்தார். இதில் ‘வருவாய் வேலையா’ என்பதற்கு பதில், ‘தளபதியே வருவாய்’ என பாடியிருந்தார். இதனால், முருக பக்தர்கள் கேலிக்கு உள்ளாவதாக கூறி, வேல்முருகன், விஜய், ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை ஆணையரிடம் ஆன்லைனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
BREAKING: தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், இன்று மீண்டும் சற்று உயரத் தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை $250.46 வரை (இந்திய மதிப்பில் ₹22,633) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.


