News April 28, 2025
உயரும் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை

பிரான்ஸிடமிருந்து ₹64,000 கோடி மதிப்பீட்டில் மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். கடந்த 9-ம் தேதி இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கி இருந்தது. ஏற்கெனவே இந்தியாவிடம் 36 ரபேல் போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 29, 2025
மதுபிரியர்களே, எச்சரிக்கை!

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலால் மனநலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மது அருந்துவதால் மூளையின் அமிக்தாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குகிறதாம். புகைப்பிடித்தலாலும் ஹிப்போகேம்பஸ் அளவு குறைகிறதாம். மொத்தத்தில் தீவிரமான மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சேர்ந்தால், மூளையின் செயல்திறன் குறைவதுடன், மனநலம் பாதிப்பது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
News April 29, 2025
முட்டை விலை மீண்டும் உயர்வு

மீன்பிடி தடைகாலம் இருப்பதால், முட்டைக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது. 420 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் கொள்முதல் விலை 430 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் முட்டை விலை அதிகரிக்கும். அதேநேரத்தில், முட்டைக்கோழி(₹85), கறிக்கோழி(₹88) விலையில் மாற்றமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.