News August 3, 2024
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக உயர்வு

தமிழக வனப்பகுதிகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது, 3,063ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
Office Laptop-ல் Whatsapp Login பண்ணாதீங்க..!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக மாறிவிட்டது Whatsapp. ஆனால், ஆபீஸில் தரும் லாப்டாப்களில் Whatsapp-ஐ பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. அப்படி செய்தால் உங்களது அலுவலகம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எளிதில் தெரிந்துக்கொள்ள முடியுமாம். Screen Monitoring, Malware போன்ற விஷயங்களை கொண்டு உங்கள் தகவல்களை திருடமுடியும் என்கின்றனர். SHARE.
News August 14, 2025
தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
News August 14, 2025
உங்க ஊருக்கு அர்த்தம் தெரியுமா?

உங்க ஊர் என்ன? என்று கேட்டால், நாம் அருகிலுள்ள நகரம் (அ) மாவட்டத்தின் பெயரையே கூறுவோம். முகவரி எழுதும்போது மட்டுமே கிராமத்தின் பெயரை நினைவில்கொள்வோம். ஆனால், நாம் பிறந்த கிராமமோ (அ) டவுனோ தான் நமது அடையாளம். அவ்வாறான ஊர் பெயர்களில் உள்ள புரம், பட்டி, குளம், பாளையம் உள்ளிட்டவற்றின் அர்த்தங்கள் என்னவென்பதை மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். உங்கள் ஊர் என்னவென்பதை கமெண்ட் செய்யுங்கள்.