News August 4, 2024

‘வாழை’ படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியீடு

image

‘வாழை’ படத்தின் 3ஆவது பாடலான ‘ஒத்தச்சட்டி சோறு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை தற்போது இயக்கி, தயாரித்து வருகிறார். நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 23ஆம் தேதி ‘வாழை’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Similar News

News January 23, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹15,000 குறைந்தது

image

காலையில் கிடுகிடுவென உயர்ந்த <<18935296>>தங்கம்<<>>, வெள்ளி விலைகள், மாலையில் மளமளவென சரிந்துள்ளன. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹20,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், மாலையில் மகிழ்ச்சியளிக்கும் விதமாக கிலோவுக்கு ₹15,000 குறைந்திருக்கிறது. சென்னையில் தற்போது வெள்ளி 1 கிராம் ₹345-க்கும், 1 கிலோ ₹3.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News January 23, 2026

ஷாக்கைக் குறைங்க முதல்வரே: நயினார்

image

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, வெற்றித் தலைவன் மோடி வருவதற்கு முன்னே வழக்கம் போல, வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு நயினார் பதிலடி கொடுத்துள்ளார். உங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே (மேலே 2-வது போட்டோ) பதில். அதை பார்த்தபின், ஷாக்கைக் குறைத்து புரட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள் என விமர்சித்துள்ளார்.

News January 23, 2026

PM மோடியின் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

image

மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரின் ஓவியம் PM மோடியின் கவனத்தை ஈர்த்தது. மேடையில் இருந்தவாறே சிறுமியின் கையிலிருந்த ஓவியத்தை கவனித்த அவர், தனது தாயாரின் ஓவியத்தை கையில் வைத்துள்ள சிறுமியின் பெயர், முகவரியை கேட்டுப் பெறுமாறு தனது உதவியாளருக்கு அறிவுறுத்தினார். தான் டெல்லி சென்ற பிறகு அந்த சிறுமிக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறியதால் அங்கு கரகோஷம் எழுந்தது.

error: Content is protected !!