News August 10, 2024
அடுத்த ரியல் ஹப்ஸ் இவை: ரிப்போர்ட்

அயோத்தி, வாரணாசி, கோவை, கொச்சி உள்ளிட்ட 17 நகரங்கள், ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறப்பதாக Colliers India-வின் ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது. உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா மாறிவரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியில் நகரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் நகரங்களில் மக்கள் குடியேறுவது அதிகரிப்பதால், 17 நகரங்கள், ரியல் எஸ்டேட் மையங்களாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
பங்களாதேஷில் நிச்சயம் தேர்தல் நடக்கும்: யூனுஸ்

பங்களாதேஷில் Inquilab Mancha அமைப்பின் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இதில் முக்கிய நபர்களும் கொல்லப்பட்டு வருவது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், 2026, பிப்.12-ல் பங்களாதேஷில் பொதுத் தேர்தல் நடக்கும் என முகமது யூனுஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
மாதவனின் போட்டோ, பெயர் பயன்படுத்த தடை

Deep fake மூலம் தனது அடையாளம் தவறாக பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து, டெல்லி HC-ல் மாதவன் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த HC, மாதவனின் பெயர், போட்டோ உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை அவர் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நாகர்ஜுனா, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் இதேபோன்ற வழக்கில், தங்களது அனுமதியை பெறாமல் அடையாளங்களை பயன்படுத்த தடை பெற்றுள்ளனர்.
News December 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 558 ▶குறள்: இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். ▶பொருள்: வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.


