News April 18, 2025
விவாகரத்து பாதையில் அடுத்த சினிமா ஜோடி?

நஸ்ரியா, ஃபஹத் ஃபாசில் ஜோடி விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவுகிறது. நஸ்ரியாவின் அண்மைக் கால சோசியல் மீடியா பதிவுகளும் அதையே உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, “நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ‘Sookshmadarshini’ திரைப்பட வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை. இது கடினமான நேரம்” என நஸ்ரியா பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 9, 2025
தோனிக்கு புகழாரம் சூட்டிய ரிக்கி பாண்டிங்

தோனியின் தலைமைப் பண்பை ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார். டி-20 போட்டிகளில் அழுத்தம் காரணமாக சில கேப்டன்கள் டக்அவுட்டில் பயிற்சியாளர்களிடம் ஆலோசனை கேட்பதை நாம் பார்த்திருப்போம். உதாரணமாக கில்-நெஹ்ரா. ஆனால் தோனி அப்படி செய்து ஒரு போதும் பார்த்ததில்லை என பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் போது டக்அவுட்டில் ஆலோசனை கேட்காத ஒரே கேப்டன் தோனி மட்டுமே என்று பாண்டிங் குறிப்பிட்டார்.
News September 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 9, ஆவணி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News September 9, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் UAE-ல் இன்று தொடங்குகிறது. தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. ஹாங் காங்குடன் ஒப்பிடுகையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் வலுவாக உள்ளது. எனினும் ஹாங் காங் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.