News April 28, 2025
திமுகவில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றம்

மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் சரியாக வேலை செய்யாத மற்றும் கட்சி பொறுப்பாளர்களிடம் இணக்கமாக செல்லாத மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படலாம் என்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 27, 2025
₹18,000 சம்பளம்.. 22,000 பணியிடங்கள்: APPLY

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News December 27, 2025
Voter list-ல் பெயர் இல்லையா? இன்று சிறப்பு முகாம்

SIR-க்கு பிறகு தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து, நீக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் ஆன்லைன் (அ) நேரடியாக <<18628448>>விண்ணப்பிக்கும்<<>> பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதற்காக இன்றும், நாளையும் 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் தேவையான ஆவணங்களுடன் சென்று விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
தீரன் அதிகாரம் ஒன்று பார்ட் 2?

‘ஜனநாயகன்’ படத்திற்கு முன்னதாகவே H வினோத், தனுஷை இயக்கவிருந்தார். ஆனால், விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், தனுஷை வெயிட்டிங்கில் வைத்தார். இந்நிலையில், மீண்டும் தனுஷ் படத்தின் பணிகளை வினோத் தொடங்கியுள்ளாராம். அத்துடன், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் 2-ம் பாகத்தையும் அவர் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் கார்த்தியுடன் இணையவுள்ளதாக தெரிகிறது.


