News April 13, 2025
அடுத்த 10 நாள்கள் முக்கியம்.. ஒதுங்கியே இருங்க: நிதின்

அடுத்த 10 நாள்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என Zerodha நிறுவன CEO நிதின் காமத் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 10 நாள்களில் அரசு விடுமுறைகளை தவிர்த்து 4 நாள்கள் தான் வர்த்தக நாள் எனவும், சந்தையின் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்து ஒதுங்கி இருக்கவும் அவர் கூறியுள்ளார். வெற்றிகரமான வர்த்தகத்திற்கு, சந்தை நிலையை கவனத்தில் கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 14, 2025
BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து RLJP கட்சி விலகல்

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) விலகுவதாக அக்கட்சி முக்கிய தலைவர் பசுபதி குமார் பராஸ் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார். தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், ஆதலால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் முக்கிய தலைவரான சிராக் பாஸ்வான் ஏதும் கூறவில்லை.
News April 14, 2025
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா? குட் நியூஸ் இதோ..

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.
News April 14, 2025
RTE இலவச மாணவர் சேர்க்கை.. விரைவில் தொடக்கம்

RTE திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இலவசமாக பயிலலாம். இதற்காக 25% இடஒதுக்கீடு உள்ளது. தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தோர் <