News August 16, 2024
G.O.A.T படத்தின் புதிய போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யின் தோற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யாரெல்லாம் ட்ரெய்லருக்கு வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 25, 2025
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு அரசு பணி வழங்க கோரிக்கை

ஆசிய கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்த துணை கேப்டனும், கண்ணகி நகரைச் சேர்ந்தவருமான கார்த்திகாவிற்கு, அரசு பணியோடு கூடிய பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்ணகி நகரில் அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட கபடி மைதானத்தை ஏற்படுத்தி தர வேண்டும். தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 25, 2025
இந்தியாவில் மட்டுமே இருக்கும் விலங்குகள்

இந்தியா பல்வேறு வகையான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வனவிலங்குகளுக்கு தாயகமாகும். பூமியில் வேறு எங்கும் காணப்படாத வனவிலங்குகள் இந்தியாவில் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த வனவிலங்கு ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
அனைத்து கட்சி கூட்டம் நடத்துக: திருமாவளவன்

விரைவில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SIR தொடர்பாக SC-ல் விசாரணையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, தமிழகத்தில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.


