News August 24, 2024

நேர்த்திக் கடனின் போது உயிரிழந்த புது மாப்பிள்ளை!

image

திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷுக்கும், சுவாதிக்கும் 15 தினங்களுக்கு முன்புதான் திருமணமானது. நரேஷுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தால், திருப்பதி கோயிலுக்கு படியேறி வருவதாக அவரது பெற்றோர்கள் வேண்டியிருந்தனர். அதன்படி, நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயில் படி ஏறினார் நரேஷ். மொத்தமுள்ள 3,550 படிகளில் 2,350வது படியை ஏறிய போது, நரேஷ் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.

Similar News

News November 23, 2025

போதை – பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்: PM மோடி

image

போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் PM மோடி வலியுறுத்தியுள்ளார். போதைக் கடத்தல் தடுப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர், ஃபென்டனில் போன்ற போதைப் பொருள்கள் பரவலையும், போதை-பயங்கரவாத கூட்டையும் ஒழிக்க வேண்டுமென்றார். மேலும், பயங்கரவாதத்தை வளர்க்கும் நிதி மூலங்களை தடுக்க முயற்சிக்கவும் அழைப்பு விடுத்தார்.

News November 23, 2025

ராசி பலன்கள் (23.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 23, 2025

சுட்டிக் குழந்தை சாம் கரணுக்கு விரைவில் டும் டும் டும் ❤️❤️

image

சுட்டிக் குழந்தை என அறியப்படும் சாம் கரணுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த 20-ம் தேதி சாம் கரண் அவரது நீண்ட நாள் காதலியான இஸபெல்லா கிரேஸிடம் திருமண புரொப்போஸல் செய்துள்ளார். கிரேஸ் வெட்கத்தில் ஓகே சொல்ல, சாம் கரண் அவருக்கு மோதிரம் அணிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் SM-ல் வைரலாகும் நிலையில், சாம் கரண்-இஸபெல்லா கிரேஸ் காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறுகின்றனர்.

error: Content is protected !!