News March 25, 2024

‘சிவசக்தி’ பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்

image

நிலவின் தென் பகுதியில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் மோடி ‘சிவசக்தி’ என பெயர் சூட்டியது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த பெயருக்கு, கோள்களுக்கு பெயர் சூட்டுவதற்கான சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆக.,23 ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

தந்தைக்கு சிலை முக்கியமா? அண்ணாமலை

image

திருவள்ளூர் பாலவாக்கம் அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததை சுட்டிக்காட்டி திமுக அரசை அண்ணாமலை சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மாவட்டம் உட்பட, TN முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா (அ) அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா எனவும் CM ஸ்டாலினிடம் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

News December 11, 2025

அமித்ஷா மன அழுத்தத்தில் உள்ளார்: ராகுல் காந்தி

image

லோக்சபாவில் நேற்று நடந்த SIR குறித்த விவாதத்தின் போது <<18524191>>ராகுல், அமித்ஷா இடையே<<>> வார்த்தை மோதல் வெடித்தது. இந்நிலையில் அமித்ஷா மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது பதற்றமாக இருந்ததால் அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாகவும், தகாத வார்த்தைகளை அவர் பேசியதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார். தனது சவாலுக்கு அமித்ஷா பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News December 11, 2025

மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க.. மிஸ் செய்யாதீங்க!

image

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதால், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மாலை தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச.26-ல் 30,000 பேர், 27-ம் தேதி 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பதால், ரெடியா இருங்க.

error: Content is protected !!