News August 21, 2024
ரேஷன் கடைகளின் பெயர் மாறுகிறது

ரேஷன் கடைகளின் பெயரை “ஜன் போஷன் கேந்திரா” என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, உ.பி. மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 கடைகளுக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 1.50 லட்சம் கடைகள் பெயர் மாற்றப்படவுள்ளன. இக்கடைகளில் இனி 50% சத்து தானியங்கள் விற்கப்பட உள்ளன.
Similar News
News March 12, 2026
ராசி பலன்கள் (12.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
News March 12, 2026
சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?


