News August 15, 2025
சாதனை தாய் மறைந்தார்

அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான ஜெப் பெசோஸின் தாய் ஜாக்கி பெசோஸ்(78) காலமானார். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் ஜெப் மூட முடிவெடுத்தபோது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மகனுக்கு கொடுத்தனர் ஜாக்கி தம்பதி. இன்று உலகை ஆளும் நிறுவனமாக அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது.
Similar News
News August 15, 2025
GST-யில் வரும் மெகா மாற்றம் இதுதானா?

வரும் செப்டம்பரில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 12% GST வரம்பு நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரம்பில் உள்ள பொருள்கள் 5% மற்றும் 18%-க்கு மாற்றப்பட உள்ளன. அத்தியாவசிய பொருள்களுக்கு குறைவான வரிவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில பொருள்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
News August 15, 2025
இந்திய லெஜண்ட்களை சந்திக்கும் ஃபுட்பால் லெஜண்ட்!

ஃபுட் பால் லெஜண்ட் மெஸ்ஸியின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது. வரும் டிச., 12-ல் இந்தியா வரும் அவர் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது சச்சின், தோனி, கோலி, கில், ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்களையும் சந்திக்க உள்ளார். டிச.15-ல் பிரதமரின் இல்லத்தில் வைத்து PM மோடியை சந்திப்பதோடு, அவரது பயணம் நிறைவடைகிறது.
News August 15, 2025
யானை – டிராகன் இணைய வேண்டிய நேரம்: சீனா

இந்தியாவும் (யானை), சீனாவும் (டிராகன்) இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டும் மிகப்பெரிய வளரும் நாடுகள் எனவும், இருநாட்டு வளர்ச்சிக்கும் இணைந்து பணியாற்றுவது தான் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்திய பொருள்களுக்கான அமெரிக்க வரிவிதிப்பு, PM மோடியின் சீன பயணங்களுக்கு மத்தியில் அந்நாடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.