News September 15, 2024

வங்கிக் கணக்கில் பணம் வந்தது! செக் பண்ணுங்க

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இம்மாதத்திற்கான தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு புதிதாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. உங்கள் கணக்கில் பணம் வந்ததா? செக் பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

சில்லறை பணவீக்கம் கடும் சரிவு.. ஜாக்கிரதையாக இருங்க

image

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்துள்ளது. அரசின் CPI(consumer price index) அறிக்கையின்படி ஜூன் மாதத்தில் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜூலையில் 1.55% ஆக குறைந்தது. 2017 ஜூன் மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 2% கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக பணவீக்கம் குறைந்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.

News August 13, 2025

சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்?

image

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!

News August 13, 2025

திமுகவின் தரங்கெட்ட நாடகங்கள்: அண்ணாமலை

image

நெல்லை MS பல்கலையில் கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி, நாகர்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளரான ராஜனின் மனைவி ஜீன் ஜோசப் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். காலகாலமாக கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் X தளத்தில் சாடியுள்ளார். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!