News June 13, 2024
பதவியேற்ற மறுநாளே எம்எல்ஏ பதவி ராஜினாமா

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய், தான் எம்எல்ஏவாக பதவியேற்ற மறுநாளே ராஜினாமா செய்துள்ளார். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம்ச்சி சிங்கிதாங் பகுதியில் போட்டியிட்டு 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக அவர் ராஜினாமா செய்தார் என்பது குறித்த தகவல் இல்லை.
Similar News
News September 6, 2025
திமுகவில் இருந்து விலகினார்.. திடீர் மாற்றம்

தஞ்சை, பாபநாசம் ஒன்றிய குழு செயலாளராக இருந்த சரவணபாபு 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவின் கோட்டையாக இருக்கும் தஞ்சையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. அண்மை காலமாக NTK-வில் இருந்து பலரும் கூண்டோடு விலகி DMK, ADMK, TVK உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமான நிலையில், இந்த புதிய இணைப்பை ‘நாங்களும் செய்வோம்’ என NTK-வினர் Trending செய்கின்றனர்.
News September 6, 2025
மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை

தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. MLA இளங்கோ மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வாக்குகள் தங்களுக்கு வரும் என தலைமை நம்புவதாகவும் கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
News September 6, 2025
எல்லை பதற்றத்துக்கு பின் தாய்லாந்துக்கு புதிய பிரதமர்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் கார்ன்விரகுல் தேர்வாகியுள்ளார். கம்போடியாவுடனான எல்லை மோதலின்போது, அப்போதைய தாய்லாந்து PM பேடோங்டர்ன் ஷினவத்ரா ராணுவ தளபதியை விமர்சித்ததாக சர்ச்சையில் அவரது பதவி பறிபோனது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பும்ஜெய்தாய் கட்சி தலைவர் அனுடின் சார்ன்விரகுல், 311 வாக்குகளை பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.