News August 8, 2024
இரண்டு அடியிலேயே குலை தள்ளிய அதிசய வாழைமரம்

நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த யூனுஸ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிர் நட்டு பராமரித்து வருகிறார். அதில் ஒரு வாழைமரம் இரண்டு அடி வளர்ந்த நிலையில் குலை தள்ளியது. இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது அந்த மரத்தை விவசாயி யூனுஸ் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News September 11, 2025
கூடங்குளம் அருகே கோவில் சிலை உடைப்பு: இருவர் கைது

கூடங்குளம் அருகே வைராவி கிணறு கிராமத்தில் பிரபல பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட போது, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில், கோவில் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக தவசிகுமார் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்களிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நெஜில்சன் விசாரிக்கின்றனர்.
News September 11, 2025
நெல்லை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 11, 2025
தற்கொலைக்கு கவுன்சிலிங் அவசியம் – நெல்லை எஸ்பி

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு கவுன்சலிங் அவசியம் என எஸ்பி பேசினார். மருத்துவமனையில் இலவச ஆலோசனை மையம் உள்ளதாக டாக்டர் ரேவதி தெரிவித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.