News March 17, 2024

முதல்வருக்கு அமைச்சர் நன்றி

image

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நே‌ரி‌ல் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இ‌தி‌ல் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News August 27, 2025

தி.மலை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

தி.மலை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

தி.மலை மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பை தொடர மாணவர்களுக்கு “நான் முதல்வன் திட்டத்திற்கு கீழ் “உயர்வுக்கு படி” சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிறது.(ஆக.28) திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரியில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாணவர்கள் பங்கு பெறலாம்.

News August 27, 2025

தி.மலை மக்களே ட்ரோன் ஓட்ட ஆசையா?

image

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!