News December 6, 2024
1,00,000 வருடங்களுக்கு மூடப்படும் சுரங்கம்

சட்டென பார்த்தால், எதுக்கு பணவிரயம் என தோன்றும். பூமியின் மேற்பரப்பில் அணுக்கழிவுகள் பரவாமல் பூமிக்கு அடியில் புதைத்து வைக்க இந்த ஓங்காலோ என பெயர் கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இது பின்லாந்தின் மேற்கு கடற்கரையான யூரஜோகி என்ற இடத்தில் சுமார் ₹7 ஆயிரம் கோடி செலவில் 1480 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 2025ல் இருந்து 1 லட்ச வருடங்களுக்கு இச்சுரங்கம் மூடப்பட்டிருக்குமாம். ஆனா யாரு அப்போ திறப்பாங்க?
Similar News
News September 18, 2025
குழந்தைகள் இந்த வகை Slipper-களை அணியக்கூடாதா?

குழந்தைகள் விரும்பி அணியும் கிராக்ஸ் வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால் முதுகுதண்டு பிரச்னை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கிராக்ஸ்-கள் Croslite என்ற இலகுவான பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் சரியான கிரிப் கிடைக்காததால், இதுபோன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
News September 18, 2025
இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.