News October 3, 2025
மனதை மயக்கும் மீனாட்சி சவுத்ரி

லக்கி பாஸ்கர், கோட் திரைப்படங்கள் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது ஸ்டைல் மற்றும் அழகுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் மேலே கொடுத்திருக்கிறோம். பாருங்க, பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.
Similar News
News October 4, 2025
ராமனாக ராகுல்; ராவணனாக மோடி: PHOTO

தசரா பண்டிகையையொட்டி உ.பி., காங்., ஆபீஸ் வாசலில் வரையப்பட்டிருந்த ஓவியம் சர்ச்சையாகியுள்ளது. அதில், ராமனாக ராகுல் காந்தியும், ராவணனாக மோடியும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ராவணனின் 10 தலைகளும் ஊழல், ED, ECI, CBI, Bihar SIR என சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சாமானிய மக்களின் பிரச்னைகளை ராகுல் தீர்த்துவைப்பார் என்ற நோக்கிலேயே இதனை வரைந்த காங்., நிர்வாகி ஆர்யன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
சரவண பவன் பயோபிக்கில் நடிக்கிறாரா சத்யராஜ்?

பிரபல சரவண பவன் ராஜகோபால் கதை படமாகவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதனை TJ ஞானவேல் இயக்கவுள்ளார். இந்நிலையில், சரவண பவன் அண்ணாச்சியாக சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பெரியார்’ பயோபிக் படத்தில் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘தோசை கிங்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 4, 2025
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்தின் சிறப்புகள்

2026 FIFA உலகக் கோப்பை தொடருக்கான கால்பந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. adidas நிறுவனம் தயாரித்துள்ள இப்பந்தில் 3 நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வண்ணங்கள் தொடரை நடத்தும் கனடா (சிவப்பு), பச்சை (மெக்ஸிகோ), நீலம் (USA) ஆகிய நாடுகளை பிரதிபலிக்கின்றன. ‘Trionda’ வகையில் இப்பந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘3 அலைகள்’ என பொருள். இத்தொடர் 2026, ஜூன் 11-ல் தொடங்குகின்றன.