News March 30, 2024
‘காக்க காக்க’ படத்தின் நினைவுகள் நிழலாடுகிறது

நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு சூர்யா தனது X பக்கத்தில், “டேனியல் பாலாஜியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வலியும் அடைந்தேன். ஒரு காட்சி சரியாக வருவதற்கு தன்னை தானே எப்போதும் உந்தி கொள்பவர். ‘காக்க காக்க’ படத்தின் இனிமையான நாட்கள் நினைவுகளாக நிழலாடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 27, 2025
BREAKING: திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி!

<<18674972>>இடைநிலை ஆசிரியர்கள்<<>>, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவொருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வரும் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
News December 27, 2025
அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், USA-வின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் USA, தைவானின் பக்கம் நிற்பதால், USA – சீனா இடையே பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி ₹99,822 கோடியில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க டிரம்ப், பச்சைக்கொடி காட்டியது பஞ்சாயத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.
News December 27, 2025
3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.


