News December 30, 2024

கிரிக்கெட்டின் உச்சம் தொட்ட மெல்போர்ன் போட்டி!!

image

டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறைந்து விட்டது என்ற கருத்தை முறியடித்துள்ளது மெல்போர்னில் கூடிய கூட்டம். கடந்த 1934-35 ஆஷஸ் தொடரின் போது, இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண சுமார் 3,50,534 பேர் 6 நாட்களில் கூடினர். அந்த சாதனையை முறியடித்து தற்போது நடைபெற்று வரும் போட்டியை காண 5 நாட்களில் சுமார் 3,51,104 பேர் கூடியிருக்கிறார்கள். இது ஆஸி.யில் கிரிக்கெட் போட்டியை காண குவிந்த அதிகபட்ச கூட்டமாகும்.

Similar News

News September 10, 2025

BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

image

கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், இன்றும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News September 10, 2025

மூக்கை நுழைக்கும் 3-வது நபர்: திமுக, விசிக சாடல்

image

ADMK பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், EPS-ஆல் நீக்கப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சி தலைவரை பஞ்சாயத்துக்கு அழைக்கும் அதிமுகவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என உதயநிதியும் சாடியுள்ளார்.

News September 10, 2025

உடம்பை இரும்பாக்கும் விதைகள்.. நோட் பண்ணுங்க பா!

image

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மட்டுமே பலர் சாப்பிடுவார்கள். ஆனால், Healthy Diet-க்கு சில விதைகளும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விதைகள், ரத்த அழுத்ததை குறைப்பதில் இருந்து புற்றுநோயை கூட வராமல் தடுக்குமாம். அப்படி மனிதனுக்கு அருமருந்தாகும் விதைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் போடோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.

error: Content is protected !!