News March 18, 2025
உலகமே எதிர்பார்க்கும் சந்திப்பு..!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நாளை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 3 ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக் கூடாது என்ற உறுதி மட்டுமே போர்நிறுத்தத்தை சாத்தியப்படுத்தும் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
Similar News
News March 18, 2025
அலற வைக்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ₹66,000ஐ தொட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி ₹66,400ஐ தொட்ட தங்கத்தின் விலை, அதன்பின் சற்றே குறைந்து ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இன்று மீண்டும் ₹66,000ஐ தொட்டு, தங்கம் வாங்குவோரை அலற வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர் முதலீட்டாளர்கள்.
News March 18, 2025
வரி கட்டுவதில் ஷாருக், சல்மானை மிஞ்சிய அமிதாப்!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவரது வருமானம் பெருகிக் கொண்டே செல்கிறது. கடந்த 2024ல் மொத்தமாக ₹350 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், ₹120 கோடி வரியாக செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் வரி கட்டுவதில் ஷாருக்கானையும், சல்மான் கானையும் மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார். திரையுலகினருக்கும் முன்னுதாரணமாய் திகழ்கிறார்.
News March 18, 2025
விறுவிறுவென உயரும் பங்குச்சந்தை

கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டு எழுந்துள்ளன. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கியவுடன், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 173 புள்ளிகள் உயர்ந்து, 22,682க்கு வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளின் பங்குகள் இன்று நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. பஜாஜ் நிதி நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன.