News September 11, 2024
பதக்கம் வென்றவரின் சோகமான கடந்த காலம்

பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய முன்னாள் ராணுவ வீரர் ஹொகடோ ஹொடோஷே சேமா, கன்னி வெடி தாக்குதலில் தனது ஒரு காலை இழந்ததாக கூறியுள்ளார். J&K- யில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது இச்சம்பவம் நடந்ததாகவும், இனி பிறந்த குழந்தை போல் தவழ்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கும் என வருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை கால் பொருத்திய பிறகே உத்வேகம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 19, 2025
2 மாதங்களில் விட்டதை பிடித்த திமுக.. தென்காசி சம்பவம்!

தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த ஜூனில் பதவியை இழந்த DMK, இன்று ADMK ஆதரவுடன் மீண்டும் அரியணை ஏறியுள்ளது. ADMK-12, DMK-9, MDMK-2, காங்., SDPI தலா 1, சுயேச்சைகள் 5 என 30 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது ADMK, DMK தலா 15 வாக்குகள் பெற்றன. இதனால், குலுக்கலில் உமா மகேஸ்வரி சேர்மேன் ஆனார். இந்நிலையில், புஷ்பத்தை வீழ்த்தி திமுகவின் கௌசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
News August 19, 2025
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. மழை வெளுக்கும்: IMD

வங்க கடலில் நாளை(ஆக.19) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் சென்னை, காஞ்சி, செங்கை, தி.மலை, விழுப்புரம், வேலூர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. கவனமா இருங்க மக்களே!
News August 19, 2025
நாளை மதியம் 1:30-க்கு இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை நாளை BCCI அறிவிக்கவுள்ளது. 12:00 pm-க்கு மும்பையில் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கும் நிலையில், 1:30 pm-க்கு அணி விவரம் அறிவிக்கப்படும். பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் நாளையே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆசியக் கோப்பை போட்டி செப்., 9-ம் தேதி துபாயில் தொடங்கவுள்ளது. அணியில் யாருக்கு இடமிருக்கும், யார் நீக்கப்படுவார்? கமெண்ட் பண்ணுங்கள்.